Monday, September 27, 2010

தீத்துண்டுகள்

மதுக்கடை அதிபர்
திருமண மண்டபம் கட்டினார்

மது அருந்த வேண்டாம் என்ற
அறிவிப்புடன்..

--
நான்கு பூனைகள்
குறுக்கே ஓடியும்

விழிப்புணர்வுடன் நடந்தேன்
ஒன்றும் நடக்கவில்லை.

--
ஒரே அனுபவத்தை
ஆயிரம் முறை பட்டும்
திருந்தி
நிமிர்ந்த போது
எனக்கு
வயது முப்பது.

1 comment:

Praveenkumar said...

தங்களது ஒவ்வொரு கவிதைகளும் படிக்கப் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது..!!