Tuesday, September 14, 2010

சன் டிவி-நமக்கு நாமே

சென்ற சனிக்கிழமை இரவு சன் செய்தி பார்க்க வேண்டியதாகி விட்டது.

முக்கியச் செய்தியில் முதல் செய்தியாக அதிமுக்கிய செய்தி ஒன்று வாசிக்கப்பட்டது.

என்ன செய்தி?

கங்கையின் வெள்ளமா?
கலைஞரின் அறிக்கையா?
நாடாளுமன்ற சண்டை காட்சியா ?
தெலுங்கானாவின் தெருப்போராட்டங்களா?

இதெல்லாம் ஒரு செய்தியா? இதையெல்லாம் ஒளிபரப்ப சன் டிவிக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.

அந்த முக்கியச் செய்தியாகப்பட்டது என்னவெனில்,
தியேட்டர்களில் எந்திரனின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதற்கு காவடி எடுத்து , பட்டாசு வெடித்து, பாலாபிஷேகம் செய்து 'புண்ணியத்தை' தேடிக்கொண்ட ரசிகர்கள்.

இதை மிகவும் பெருமையுடன் ஒளிபரப்பிகொண்டிருந்தார்கள்.

கங்கையில் வெள்ளம் வந்தால் என்ன?
எங்கே குண்டு வெடித்தால் என்ன?

அவரவர்க்கு அவரவர் செய்திதானே முக்கிய செய்தி.

தங்களின் விளம்பரயுக்தியின் மீது சன் டிவிக்கு அபார நம்பிக்கை.

தங்களின் பல படங்கள் தியேட்டர்களில் காற்றுவாங்குவதையும் சூப்பர் ஹிட் என்று சொல்லி அங்கே ஆட்களை திரட்டி ஆட வைத்து அதை செய்தியில் காட்டுவதை 'கொள்கையாக' கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு என்ன, திரண்டு ஆடுவதற்கு 'கூலிக்கு' ஆட்களைப் பிடித்தால் போயிற்று.

தங்களை தாங்களே புகழ்ந்து கொள்வதில் அவர்களுக்கு ஒரு அலாதி பிரியம் போல.

இதற்கு பெயர்தான் 'நமக்கு நாமே' திட்டம் என்பதா?

திடீரென்று மனதில் ஒரு பயம்,பீதி.

ஓடாத மிக மோசமான படத்தையே 'மெகா ஹிட், சூப்பர் ஹிட்' என்று சொல்லி 6 மாதத்திற்கு தன் அனைத்து கிளைகளிலும் ஒளிபரப்பி நம்மை படுத்திஎடுப்பார்கள்.

இப்போது ஷங்கரும், ரஜினியும் கிடைத்து விட்டால் கேட்கவா வேண்டும்.என்ன செய்ய போகிறார்களோ.

ஒவ்வொரு முறையும் ஆளாளுக்கு புகழ்ந்து பேசி நம் காதில் ஈயத்தை பாய்ச்சுவார்கள்.

'..' வென வேடிக்கை பார்க்கும் மக்களை கண்டால் தான் அவர்களுக்கு என்ன ஒரு குஷி.

இப்படித்தான் படத்தின் ட்ரைலர் வெளியிடுவதையே 'ட்ரைலராக' ஒரு வாரம் காட்டிகொண்டிருந்தார்கள் .
அதை முக்கிய செய்தியாகவேறு காட்டி திருப்திப் பட்டுகொண்டார்கள்.

ட்ரைலருக்கே பட்டாசு என்பதெல்லாம் சன் டிவியின் வழக்கமான பப்ளிசிட்டி' செட் அப் 'ஆகத்தான் தோன்றுகிறது. ஆளில்லாத அவர்களின் மற்ற படத்திற்கே ஆடும் ரசிகர்கள் ட்ரைலருக்கும் ஆடிவிட்டு போகிறார்கள்.

சன் டிவியின் விளம்பர யுக்தி சந்தையில் விற்கப்படும் காய்கறி விற்பனையை சார்ந்தது.

அடுத்தவர்களின் அந்தரங்கம் எனில் அந்த சந்தையில் கூறு போட்டு கூவி விற்பார்கள். இலவசமாக கூட கிடைக்கலாம். அவர்களை பொறுத்த வரை பார்க்க கூட்டம் சேர்ந்தால் போதும். உதாரணம்: நித்யா.

அதுவே தங்களின் சொந்த சரக்கு எனில் ஓடி ஓடி திருட்டு வி சி டி க்களை பிடிப்பார்கள்.

மக்கள் அனைவருக்கும் அறிவிப்பது என்னவெனில் எந்திரன் வரும் வரை யாரும் சாப்பிடாதிருங்கள் . தூங்காதிருங்கள். வெளிவரும் எந்திரன் சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித்தரும்.


எனவே விளம்பரம் என்ற பெயரில்,

ஒரு சுறாவளி புயல் வீசப்போகிறது.தயாராயிருங்கள்!
ஒரு கொலை வெறித்தாக்குதல் நடக்கப்போகிறது. தயாராயிருங்கள்!






--
yalini

7 comments:

ramalingam said...

விநாசகாலம் விபரீத புத்தி.

raja said...

மக்கள் அனைவருக்கும் அறிவிப்பது என்னவெனில் எந்திரன் வரும் வரை யாரும் சாப்பிடாதிருங்கள் . தூங்காதிருங்கள். வெளிவரும் எந்திரன் சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித்தரும்.


எனவே விளம்பரம் என்ற பெயரில்,

ஒரு சுறாவளி புயல் வீசப்போகிறது.தயாராயிருங்கள்!
ஒரு கொலை வெறித்தாக்குதல் நடக்கப்போகிறது. தயாராயிருங்கள்!....
.......நீங்க என்னதான் செருப்படி அடிச்சாலும் இந்த பன்னாடைகளுக்கு உறைக்காது.....

கவி அழகன் said...

nice keep it up

Anonymous said...

As long as we, public are ready to kill our time in these unwanted news, those business people will try their best to capture our thoughts, time and money, ITS TIME FOR A CHANGE, WE OUGHT TO COME OUT AND SEE REALITY

GSV said...

நல்லா வேலை நான் இந்தியால இல்ல இல்லைனா இந்த கருமத்தையெல்லாம் பார்க்க வேண்டி இருக்கும். JUST 203 DAYS TO GO... :) LET SEE...

Praveenkumar said...

ரொம்ப நல்லா நச்சுனு நெத்திப்பொட்டில அடிச்சாப்போல சொல்லியருக்கீங்க..!!

Anonymous said...

இதைவிடவும் கொடுமை என்னனா சன்டிவி யில் எந்திரன் நிகழ்ச்சியில் பா.விஜய் சொன்னாருப் பாருங்க. கிளமஞ்சாரோனா எவெரஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு பெயர்னு செம காமேடி மச்சி..... நாக்கப் பிடிங்கிட்டு சாகலாம் அவனுங்க..

http://bit.ly/aaUm59