Monday, May 23, 2011

கலைஞரின் கபடநாடகமும் - நீலிக்கண்ணீரும்..!


ஸ்பெக்ட்ரம் வெளிவந்து அதற்கு காரணமாக இருந்த தொலைதொடர்பு துறை அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்ட போது 'இது திராவிடர்கள் மீது ஆரியர்கள் தொடுத்த போர்' என்றார் கருணாநிதி. பின்பு 'அவர் ஒரு தலித் என்பதால் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என்றார்.

மீண்டும் '1 .76 லட்சம் கோடி ரூபாயை ஊழலை ஒருவராலேயே செய்திருக்க முடியாது. ஒருவரை கைது செய்ததாலேயே அவர் குற்றவாளி ஆகிவிட முடியாது.பல நல்ல திட்டங்களை அவர் கொண்டு வந்த காரணத்தால் பொறாமை பிடித்த சிலர் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என்றார்.

சி.பி..கோர்ட் மூலம் கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டு சிறையிலும் அடைத்தாகிவிட்டது.அவருக்காக வாதாடின வக்கீல் ராம்ஜெத் மலானி.பிஜேபி யை சேர்ந்தவர்.

ஒரு காலத்தில் பா..வை பற்றி, 'பண்டார பரதேசிகள் எல்லாம் இந்த நாட்டை ஆளத் துடிக்கின்றனர்'என்று கூறியவர் தான் இன்று அதே பண்டார பரதேசிகளில் ஒருவராகிய மூத்த கிரிமினல் வக்கீல் ஒருவரை கனிமொழிக்காக வாதாட வைத்துள்ளனர்.

கனிமொழி கைது செய்யப்பட்ட பிறகு 'உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் அவள் செய்யாத தவறுக்காக சிறை சென்றால் உங்கள் மனம் எந்த அளவிற்கு வேதனை படுமோ அந்த நிலையில் இருக்கிறேன்' என்கிறார்.

அய்யா...உங்களுக்கு மனசாட்சி என்பது ஒரு இருக்கின்றதா? தான் செய்த தவறை காலம் தாழ்த்தி கூட இன்னும் உணராத போது என்னவென்று சொல்வது.

ஒரு சம்பவத்தை மட்டும் நினைத்து பாருங்கள்.ஒரு வயதான முதியவள் , சிகிச்சைக்காக தானே தமிழ்நாட்டிற்கு வந்திறங்கினார்.கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தன் பதவி,மகன்களின் பதவிக்காகவே அந்த அம்மையாரை மனிதாபிமானம் இல்லாமல் திருப்பி அனுப்பியதை நினைத்து பாருங்கள்.நீங்களும் சக்கர நாற்காலியில் தான் வலம் வந்துகொண்டிருக்கிறீர்கள்.அந்த முதியவள் எத்தகைய மன உளைச்சலில் திரும்பி போயிருப்பாள்.அந்த பாவமே உங்களுக்கு சரியான தண்டனைகளை கொடுக்கும்.

இத்தனை ஊழல்கள் என்று கேட்டால் 'முந்தய ஆட்சியில் நடக்காததா?' என்றும்,
மின்சாரம் பற்றி கேட்டால் 'வட மாநிலங்கள் எல்லாம் இருளில் தான் மூழ்கி இருக்கிறது' என்று என்ன சர்வாதிகாரமான பதில்கள்.

லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிப்பதை வேடிக்கை பார்த்த,கொலைகார ராஜபக்ஷேவை கம்பளம் விரித்து வரவேற்ற ஒரு சர்வாதிகார கொடுங்கோலனுக்கு சமம் நீங்கள்.

தன் மகள் சிறை சென்றதற்கு இந்த குதி குதிக்கிறார்.

தேர்தல் முடிவு வந்ததும் ஸ்டாலினிடம் சொன்னாராம் 'கனிமொழிய மட்டும் விட்டுடாதப்பா...' என்று.

அப்பன் செய்த பாவம் பிள்ளைக்கு என்பார்கள்.

11 comments:

greesh said...

குடும்பம் குடும்பம்ன்னு சொல்லி கண்ணு வச்சு கண்ணு வச்சே... இந்த நிலைக்கு வந்திருக்கிறோமே அன்றி, நாங்கள் குற்றமற்றவர்கள்...

தர்மத்தின் வாழ்வுதனை..."

<<::தடங்கலுக்கு வருந்துகிறோம். அய்யாவின் ராஜதந்திரத்தின் மற்றுமொரு விளைவாக கலைஞர் டிவி இத்துடன் இழுத்து மூடப்படுகிறது::>>

Rathnavel said...

நல்ல பதிவு.

Rathnavel said...

விரைவில் குணமாகி வர பிரார்த்தனைகள்.

hi said...

எத்தனை பேரை பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார் கருணாநிதி ? சீமான் அப்படி என்ன பேசி விட்டார் ? தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் வந்து, எமது மீனவனை சிங்களக் காடையன் சுட்டுக் கொல்கிறான், மீண்டும் இது தொடர்ந்தால், சிங்கள மாணவர்கள் இங்கே நடமாட முடியாது என்று பேசியதில் என்ன குற்றம் உள்ளது ? தொடர்ந்து ஒருவன் சுட்டுக் கொண்டே இருப்பான், கருணாநிதியைப் போல கடிதம் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா ? இதற்காக, பெருங் கொள்ளையன் போல சீமானை நூற்றுக் கணக்கான போலீசை வைத்து கைது செய்தீர்களே கருணாநிதி….. ….. சீமானின் பெற்றோர் மனது அப்போது எப்படி இருந்திருக்கும் ?

பா.சண்முகம் said...

சாகும் போதும் பதவியிலே சாகனும்னு ஆசை .அது நடக்கலை,வேணும்னா இப்படி பண்ணலாம்
மெரீனா பீச்சு ஓரத்துல ,இடப்பக்கம் ஒரு ஏர் கூலர் ,வலப்பக்கம் ஒரு ஏர் கூலர் நடுவுல உட்கார்ந்துட்டு சாகும் வரை உண்ணாவிரதம் கனிமொழி கு ஜாமீன் கிடைக்கனும்னு ஒரு பிட்ட போடுங்க தலைவா!! ,உங்களுக்கு இது என்ன புதுசா !!!

சி.பி.செந்தில்குமார் said...

எப்படியோ கலைஞர் டி வி ஊத்திக்கப்போகுது

vaitheetheboss said...

குடும்ப கொள்ளை ஆட்சி முடிவுக்கு வந்ததே மகிழ்ச்சி.. இந்த spectrum வழக்கு எல்லாம் பிசு பிசுத்து போய்விடும் பாருங்களேன்.. கருணாநிதி பார்க்காததா.. போங்க பாஸ்..
vaithee.co.cc

kalamaruduran said...

அய்யா...உங்களுக்கு மனசாட்சி என்பது இருக்கின்றதா?

kalamaruduran said...

அய்யா...உங்களுக்கு மனசாட்சி என்பது இருக்கின்றதா?

kalamaruduran said...

அய்யா...உங்களுக்கு மனசாட்சி என்பது இருக்கின்றதா?

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.