Monday, September 27, 2010

செவி வழியில்

நானும் கருப்பு
அவனும் கருப்பு

நானும் சைவம்தான்
அவனும் சைவம்தான்

அவனை போலவே
எனக்கும் உறுப்புக்கள்

நான் படித்த பள்ளியில் தான்
அவனும் படித்தான்

தேநீரைக்கூட
அண்ணாந்து குடிக்கும்
அர்த்தமுள்ளவர்கள் நாங்கள்
என்றாலும்

நாங்கள் கேட்டுக் கொண்டால்தான்
தெரிகிறது
எங்கள் சாதி.

1 comment:

Praveenkumar said...

//நாங்கள் கேட்டுக் கொண்டால்தான்
தெரிகிறது
எங்கள் சாதி. //

உண்மையான நண்பர்கள் சாதியினை கேட்டுக்கொள்வதில்லை. கேட்கின்ற எண்ணம் வந்தாலே நட்பில் விரிசல் ஏற்படலாம்.

மற்றபடி நல்லாயிருக்கு..!!