Monday, March 28, 2011

அகதியின் மொழி

என் நாக்கு பிளந்து அவை

இருவேறு மொழிகளை பேசுகின்றன

தஞ்சம் புகுந்த ஒரு அகதியின் மொழிகளவை

அதிலொன்று இரந்து கேட்கிறது

ஏழைகளின் உணவு விண்ணப்பத்தைப்

பிழையாகப் படிக்கிறது

அந்நியர்களுடன் சமரசம் செய்ய

வார்த்தைகளை தேடுகிறது

வெட்கித்துப் போகிறது

மறுபக்கம் திரும்பி என்னிடம்

'நீயொரு அகதி' என்கிறது

மற்றொரு நாவு

பொதுவெளியில் ஒளிந்துகொள்கிறது

உயர்த்தமுடியாத குரலுக்காக

மௌனிக்கிறது

வீடும் வெளியும் வேடங்கள்

புனையச் சொல்ல

அது சாத்திய கதவின் பின்னிருந்து

என் அழுகையை விம்முகின்றது.



--ஈழப் பெண் கவிஞர் தர்மினி

4 comments:

தனிமரம் said...

அழகான கவிதை அகதியின் துயரை எப்படி படம்பிடிப்பது உலகில் ஓடி ஓளியும் உயிர்களின் வலிகள் புரியாது யுத்த அரக்கனுக்கும் பாசிய வாதிகளுக்கும்.

சிந்தையின் சிதறல்கள் said...

கேட்குமா கல்நெஞ்சக்காரருக்கு

அருமையான வரிகள்

Hariharan said...

Good One

தமிழ் உதயன் said...

சம்மட்டியடி வார்த்தைகள்