நமது தமிழ் எழுத்தாளர் ஒருவர் கேரளா போயிருந்தபோது அங்கிருந்த கேரளக்காரர் நம்மவரை கிண்டல் அடித்திருக்கிறார்.."தமிழ் தமிழ்னு வாய் கிழிய நல்லா பேசத்தான் செய்யறிங்க..ஒண்ணும் செயலில் காணவில்லை.எப்போ பார்த்தாலும் மீனவர்கள் தாக்கப்பட்டார்கள்..சுடப்பட்டார்கள்னு செய்திகள் வந்துட்டே இருக்கே ..உங்களுக்கெல்லாம் கோபமே வராதா..?பாக்கற எங்களுக்குதான் எரிச்சலா இருக்கு.."என்று சொல்லியிருக்கிறார்.நம்மவர் பதில் சொல்லமுடியாமல் தலைகுனிந்திருகிறார்.
உண்மை ..
மக்களுக்கு ஒரு பிரச்சனையை என்றால் மக்களுக்கு தான் வர வேண்டும்.நம் மக்கள் எதைத்தான் கண்டுகொள்கிறார்கள்.நீ கேளு..நான் கேளு என்று தினமும் கொல்லப் பட்டுக்கொண்டிருக்கும் மீனவர்களை பார்த்து வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.அன்றாட செய்திகளில் அதுவும் ஒரு செய்தி.
மீனவனுக்கு ஆபத்து என்றால் மீனவனுக்கு முதலில் கோபம் வரவேண்டும்.ஒரு உருப்படியான ஆர்ப்பட்டமாவது நடத்தியிருக்கிறார்களா?சொல்லிக் கொள்ளும்படியான ஆர்ப்பாட்டங்கள் ஏதும் உண்டா?யார் போனால் என்ன அரசுதான் பணம் கொடுக்கிறதே..என தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே போகின்றனர்.ஆயிரத்தெட்டு சங்கங்கள் வைத்துக்கொண்டு மீனவர்களுக்குள் ஒன்றுமை இல்லை.ஆந்திராவில் போலீசாருக்கும் மீனவர்களுக்கும் நடந்த கலவரம் போர் காட்சிகளை போல இருந்தது..ஆனால் இங்கே?
இன்று மீனவனை தாக்கும் குண்டுகள் நாளை ஒவ்வொருவர் வீட்டையும் தாக்கினால் தான் விழித்தெழுவோமா?
காஷ்மீரியை பாகிஸ்தான் சுட்டுக் கொன்றால் இந்தியனை சுட்டுவிட்டான் என்கிறார்கள்.குஜராத்தி மீனவனை கைதுசெய்தால் இந்திய மீனவன் என்கிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டு மீனவனை மட்டும் சுட்டுக் கொன்றால் தமிழ்நாட்டு மீனவன் என்கிறார்கள்.
எதிரி நாடுபோல் இருக்கிற பாகிஸ்தான் கூட நாம் மீனவர்கள் எல்லை தாண்டினால் சட்டரீதியாகவே நடத்துகிறார்கள்.யாரையும் சுடுவது இல்லை.கொல்வது இல்லை.நம்முடைய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தினால் விட்டுவிடுகிறார்கள்.ஆனால் இதுவரை 400 க்கும் மேற்ப்பட்ட மீனவர்களை சுட்டு கொன்றிருக்கிறார்கள்.கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நாசமாக்கியுள்ளார்கள்.நம் மீனவர்களை படுக்கவைத்து ஐஸ் காட்டி வைப்பது,நிர்வாணமாக நிற்கவைப்பது,கெளுரு மீன் முள்ளால் காதில் ஓட்டை போடுவது என சொல்லவொண்ணாத சித்ரவதைகள் தொடர்கின்றன.இதில் எழுதமுடியாத சில சம்பவங்களும் உள்ளன.
எங்களை ஏன் அடிக்கிறீர்கள் ? நாங்கள் என்ன புலிகளா ? என்றால் தமிழன் எங்கே இருந்தாலும் எங்களுக்கு எதிரி தான் என்று சொல்லி சொல்லியே அடித்திருக்கிறார்கள்
பிரான்ஸ் தேசத்தில் ஹெல்மெட் கட்டாயம் என்றபோது இதனால் சீக்கியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அமைச்சர் பூட்டாசிங்கை அனுப்பி சொல்லவைக்கும் அளவுக்கு சுறுசுறுப்பு கொண்ட மன்மோகன்சிங் தமிழக மீனவர்கள் விஷயத்தில் மட்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
என்னால் கடிதம் அனுப்பத்தான் முடியும்.படை எடுத்தா போக முடியும் என்கிறார் முதல்வர்.தன் பிள்ளைகளுக்கு பதவி பெறவும், செம்மொழி மாநாட்டிற்கும் எடுத்த முயற்சிகளை பார்த்த போது இது அவருக்கு பெரிதா என்றே தோன்றுகிறது .
யாராவது கோபமாக பேசிவிட்டால் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசிவிட்டதாக சட்டம் பாய்கிறது.உண்மையான உள்ளக் கொதிப்பை வெளிப்படுத்தினால் குற்றம்.இந்தியாவின் இறையாண்மை தான் என்ன? சிங்களவர்களையும்,இலங்கையின் இறையாண்மையையும் பாதுகாப்பதா? இந்தியர்கள் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

4 comments:
இதை படிங்க...
http://krnathan.blogspot.com/2011/01/blog-post_31.html
யாராவது கோபமாக பேசிவிட்டால் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசிவிட்டதாக சட்டம் பாய்கிறது.உண்மையான உள்ளக் கொதிப்பை வெளிப்படுத்தினால் குற்றமாம்.
என் தங்காய்...
காலம் வரும் வரை காத்திருக்கின்றேன்.
இந்தியாவிடம் இருந்து தமிழகத்தை பிரிக்க வேண்டும், அல்லது இந்தியாவிற்கு வேறு ஒரு அரசாங்கம் (ஒரு நம்பிக்கை தான் அவர்களாவது தமிழர்களுக்கு சம மனிதனாக மதிப்பார்கள் என்று) அமைக்க வேண்டும்...
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...... பிற மாநிலத்தில் உள்ளது போல இன உன்னர்வு உள்ள தலைவன் வேண்டும்,
Post a Comment