Monday, March 21, 2011

இதுவா ராஜ தந்திரம்..?

தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு.கொள்கை ,சுய மரியாதை என்பது இடுப்பில் கட்டியுள்ள வேட்டி.மத்தியில் அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்ததன் மூலம்,தன் சுய மரியாதையை நிரூபித்துள்ளார் கருணாநிதி என பெருமிதம் கொப்பளிக்க தி.க தலைவர் வீரமணி வெளியிட்ட அறிக்கையின் ஈரம் காயும் முன் முடிவு ஏற்பட்டுள்ளது.

சுய மரியாதையை விட பதவி தான் முக்கியம் என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் கறாராக கேட்ட 63 தொகுதிகளை கொடுத்து மத்திய அமைச்சர் பதவிகளை தக்க வைத்து கீ.வீரமணி முகத்தில் கறியை பூசி...மகிழ்ந்துள்ளார் முதல்வர் ..,தன்மானத் தலைவர்.

'ஸ்பெக்ட்ரம்' எனும் கூர் வாள்,தலைக்கு மேலே தொங்கும் போது, மீசை துடிப்பது போல் நடிக்கலாமே தவிர, உண்மையில் துடிக்கவும் முடியாது..மனம் வெதும்பி வெடிக்கவும் முடியாது.

சர்க்காரியாவில் சிக்கி இந்திராவிடம் தண்டனிட்டதற்கும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி சோனியாவிடம் தண்டனிவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஆனால் தூசு அலர்ஜியில் கருணாநிதி தும்மினால் கூட 'அடடா...தலைவர் ராஜ தந்திரத்துடன் தும்முகிறார் ;இந்த தும்மலில் எத்தனை அர்த்தங்கள் உள்ளதோ ..! என வியந்து பாராட்டும் ஒரு கூட்டம் அவர் குட்டி கரணங்கள் ராஜ தந்திரம் என்றே புளங்காகிதமடையும்.

63 தொகுதிகள் கேட்டதும் இது நியாயமா..தர்மமா..? என வெகுண்டெழுந்து ஆனது ஆகட்டும் என்ற முடிவுக்கு வந்து ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றினார்..'கட்சியின் மானத்தை கருணாநிதி காப்பாற்றி விட்டார் என்று தொண்டர்கள் குதூகலித்தனர்.ஆனால் காங்கிரசை கழற்றிவிட்டதால் உலக தமிழர் மத்தியில் கருணாநிதியின் செல்வாக்கு உயர்ந்து விட்டது என்று வீரமணி சொல்வது அப்பட்டமான பொய்..

2009 ம் ஆண்டு பிப்ரவரியில் ஈழத் தமிழர்களை நான்கு திசைகளிலும் சூழ்ந்து எட்டு நாட்டு ராணுவ உதவியுடன் ராஜபக்சே தாக்குதல் நடத்திய போது கருணாநிதி இந்த காரியத்தை செய்திருந்தால் உலக தமிழர்கள் உச்சி முகர்ந்திருப்பார்கள்.இப்போது கருணாநிதி 'கா' விட்டிருப்பது கேவலம் 3 எம்.எல்.ஏ.தொகுதிகளுக்காக. மூன்று லட்சம் தமிழர்களுக்காக ஆடாத சதை மூன்று தொகுதிகளுக்காக ஆடுவது இன நலன் கருதி அல்ல என்பதை வீரமணி தவிர மற்ற தமிழர்கள் அனைவரும் அறிவார்கள்.

5 comments:

Praveenkumar said...

மிகவும் அருமையாக ஆவேசத்துடன்.... உண்மை நிலையை எடுத்து தெளிவா விளக்கியிருக்கீங்க...!!! தந்போதைய சூழலில் அவசியமான பதிவுங்க..!!

gurumoorthi said...

I dont know how to post this with tamil font, but still "All the best" continue your good work. Why cant people like you come in to politics to help our tamil nadu and people.

MANO நாஞ்சில் மனோ said...

சர்க்காரியாவில் சிக்கி இந்திராவிடம் தண்டனிட்டதற்கும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி சோனியாவிடம் தண்டனிவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.//

ம்ம்ம்ம் அட ஆக்கம் கெட்ட கூவைகளா.....

yohannayalini said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே!!

குரு தமிழில் தட்டச்ச இந்த உரலியை உபயோகிக்கவும்.

http://www.google.com/transliterate/tamil

gurumoorthi said...

உதவிக்கு நன்றி