Saturday, October 2, 2010

பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?


நண்பரின் ஓயாத பரிந்துரை காரணமாக நூலகத்தில் பெரியாரின் பக்களின்பால் தலையை திருப்பவேண்டியதாயிற்று.

அப்போது ஒரு நூலில் பெரியாரின் கருத்து அருமையாக இருந்தாதால் இங்கே..

''திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில் அதாவது, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை மனிதன் இன்றைக்கும் எதற்காக கடைபிடிக்க வேண்டும்? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ அதைப்போலவே பெண்களை பலிகொடுக்கிறார்கள்.

அந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதுக்காக இப்படி கொடுமைபடுத்த வேண்டும்.? இந்த திருமண முறை சுய நலத்திற்காகவே ஒழிய பொதுநலத்திற்காக அல்லவே. புருஷனுடைய வேலை பொண்டாட்டியை பாதுகாப்பதும், பொண்டாட்டி புருஷனை பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால் அவற்றை இரண்டு பேருமே சேர்த்து காப்பாற்றவும் தான் பயன்படுகிறதே தவிர சமுதாயத்திற்கு அல்ல.

அடுத்த வீடு நெருப்பு பிடித்தாலும் அதைப்பற்றி கவலை பட மாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான். ஆனால் அதுவே அவன் வீட்டுக்கு தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவே ஆகும். ஆண்களும் பெண்களும் இதன்கைய தொல்லையில் மாட்டிகொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அத்தனை அடுத்து புருஷன் பொண்டாட்டியோடு தனிக்குடித்தனம், தனிச்சமையல் என்று ஆக்கிக்கொண்டு பொது நல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகிறார்கள்.

உலகம் வளர்ச்சியடைய வேண்டுமானால் உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால், திருமணம் என்பதை கிருமினல் குற்றமாக்கி விட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் அது வந்தே தீரும். சம எண்ணிக்கை உடையதும் சம உரிமைகளை பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படி கொடுமை படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்.

ஒரு பெண்ணாக பார்த்து ஆணை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக்கிட கூடாது.''

இவ்வாறு சொல்லி இருக்கிறார்

எவ்வளவு உண்மையான கருத்து. அவருடைய மற்ற கருத்துகள் பிடித்திருக்கிறதோ இல்லையோ இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

இன்னொரு பிரபல வாக்கியம் நினைவிற்கு வருகிறது..

''ஆண்களோடும் வாழ முடியாது.
அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது''

6 comments:

buvan said...

//''ஆண்களோடும் வாழ முடியாது.
அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது''//

ஹா ஹா ஹா............ உண்மைதான்....... நானும் படித்திருக்கிறேன்.......

பகலவன் said...

ஹ ஹா ஹா ,


யார் அந்த நண்பர் ? தொடர்ந்து படியுங்கள்.............

GSV said...

ஓகே...."live in" ல சமுதாயத்துக்கு என்ன பயன் ? இத பத்தி எதாவது சொல்லி இருக்காரா ?

GSV said...

//''ஆண்களோடும் வாழ முடியாது.
அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது'//

நம்ம ஊரு கொழந்தைகளுக்கு பஞ்ச் டயலாக் மட்டும் பட்டுன்னு நியாபகம் வருமே :)))

எனக்கு நியாபகத்துக்கு வர்றது

"Every man should get married some time; after all, happiness is not the only thing in life!! "

பயணமும் எண்ணங்களும் said...

''திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில் அதாவது, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை மனிதன் இன்றைக்கும் எதற்காக கடைபிடிக்க வேண்டும்? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ அதைப்போலவே பெண்களை பலிகொடுக்கிறார்கள்.]


ஓரளவு உண்மை தமிழ்நாட்டில்..இந்தியாவில்.

மற்ற நாடுகளில்லை..

நல்ல எழுத்து உங்களது..

பிரவின்குமார் said...

///ஒரு பெண்ணாக பார்த்து ஆணை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக்கிட கூடாது.''//
இன்றைய காலகட்டத்தில் இது போன்று நிறைய செயல்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

//''ஆண்களோடும் வாழ முடியாது.
அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது'//

இன்றைய நிலையில் பெண்களோடும் வாழ முடியாது. அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது'
இப்படியும் பொருந்துமே..!!!

இது எமது கருத்து.
திருமணத்தில் இருவருமே பலியிடப்படுகிறார்கள். ஆனால் பெண்களின் நிலைமை சில சமயங்களில் இவர்களை விட மிகவும் கொடுமையாகத்தான் உள்ளது. காலபோக்கில் நிச்சயம் பெரிய மாற்றம் ஏற்படும்.
பகுத்தறிவுமிக்க கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி.!