Monday, August 30, 2010

நவ நாகரீக ஆதிமனிதன்

சாருவின் சென்ற வார 'மனம் கொத்தி பறவை' படித்து விட்டு மனம் ஒரு மாதிரி தான் ஆகி விட்டது. பல்வேறு நாடுகளின் அசைவ உணவுகள் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். சைவப்பிரியர்கள் மனதை கல்லாக்கி கொண்டு மேற்படி படியுங்கள் என்று நாய்க்கறி பற்றியும், வட மாநிலங்களில் நாய்க்கறி முக்கிய விருந்தாக பரிமாறப்படுவது பற்றியும், உலக நாடுகளில் நாய்க்கறி முக்கியமான ஒன்று எனவும், சமைக்காத பச்சை மீன் உணவுகளை ஜப்பானில் சாப்பிடுவதையும், ஏதோ ஓரிடத்தில் தான் சாப்பிட்ட தவளைக்கறியின் லெக் பீஸிற்கு சிக்கன் லெக் எல்லாம் இணையே ஆகாது எனவும் எழுதி இருந்தார்.

நான் கூட travel & living சேன்னலில் பல முறை பார்த்திருக்கிறேன். ஜப்பானோ , சீனாவோ போன்ற தோற்றத்தில் ஒரு பெண் சமையலுக்கு வருவார். அவர் ஆச்டோபஸ்ஸை அப்படி சுடு தண்ணீரில் போட்டு எடுத்து லேசாக வால்பகுதிகளை மட்டும் நீக்கி விட்டு மேசையில் கொண்டு வந்து பரிமாறுவார். அப்படியே பச்சையாக இருக்கும்.

பெரிய வண்டு போன்ற தோன்றமுடிய ஜந்து, கடல் குதிரை, தவளை, மற்றும் பூசியினங்களை அவற்றை வேக வைத்தார்களா இல்லையா என்றே தெரியாது. தோன்றம் மாறாமல் அப்படியே முள்கரண்டியை குதிக்கொண்டிருப்பர்கள். அதன் கண்கள் வெறித்து பார்ப்பதை எல்லாம் அவர்கள் சட்டை செய்வது போல இல்லை.

ஒருமுறை ஒரு ஆசாமி மேசையில் ஒரு ஆமையை கொண்டு வந்து வைத்தார். அது தன் தலை, கை, கால்களை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. ஓடு மட்டும் தான் தெரிந்தது. அந்த மனிதன் பள பளக்கும் கத்தியால் ஓட்டின் அடிப்பகுதியை குத்தினான். அந்த ஆமை உடனே தலையை வெளியே நீட்ட,அவன் சடார் என தலையை பிடித்து விட்டான். பிறகு அந்த கத்தியை கொண்டு தலையை வெட்ட போக.. எனக்கு அதற்கு மேல் பார்க்க முடியாமல் சேன்னலை மாற்றி விட்டேன். சிறிது நேரம் கழித்து வந்தால், அந்த ஆமை மசாலாக்களுடன் பரிமாறப்பட்டிருந்தது. ஒரு சில தட்டிக்களில் தலை, கால், ஓடுகளுடன் அப்படியே சமைத்தும் வைத்திருந்தார்கள். அதன் கண்கள் வேறு ஒரு மாதிரி இருக்க, ஓட்டை நீக்காமல் எப்படி சாப்பிடுகிறார்கள் என யோசித்துக்கொண்டிருந்தேன்.

அதேபோல மற்றொரு முறை பாம்பின் தோலை உரிந்துக்கொண்டிருந்தார்கள். போதுமடா சாமி என அந்த நிகழ்ச்சியை பார்பதையே விட்டு விட்டேன்.

நடிகை ஏஞ்சலினாவின் அழகின் ரகசியத்திற்கு காரணம் அவர் ஆப்பிரிக்காவில் இருந்து வரவழைக்கப்படும் கரப்பான் பூச்சியை சாப்பிடுவது தானாம். பத்திரிக்கை செய்தி எந்த அளவு உண்மை என தெரியவில்லை. ஒருவேளை உண்மையிலேயே அவர் சாப்பிடுவாரோ?

சாரு சொன்னா மற்றொரு செய்தி அசைவப்பிரியர்களையே வாந்தி வரச்செய்து விடும். ஜப்பானியர்களை பார்த்து மிக அருவருப்பாகி விட்டது எனக்கு.

ஜப்பானிய வி.வி..பி.க்களுக்கு மட்டும் நடக்கும் முக்கிய விருந்து நிகழ்ச்சியை பற்றி சொல்லி இருந்தார். அந்த விருந்தில் சினையாக இருக்கும் மாட்டின் வயிற்றில் இருக்கும் 4 அல்லது 6 மாத குட்டியை வெளியே எடுத்து அதன் மேல் ஏதோ சிலவற்றை தூவி ஏதோ முறையில் சுடவைத்து அப்படியே மேசையில் கொண்டுவந்து வைத்தார்களாம். அதன் தலை ஒரு ஜப்பானிய உயர் அதிகாரிக்கு வைக்கப்பட்டதாம். அவர் அதன் மேல் ஸ்பூனை குத்த இதம் பீறிட்டு வந்திருக்கிறது. மற்ற யாவரும் கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு கொண்டிருக்க, நம் சாருவின் நண்பர் பொறுக்க முடியாமல் '' என சொல்லிவிட்டாராம்.

அந்த அதிகாரிக்கு கோபம் வந்து அவர்களை தனியே அழைத்து ''நாங்கள் இதை சாப்பிட்டு என்ன செத்தா போய் விட்டோம். இந்தியர்களாகிய நீங்கள் கலாச்சாரம் கற்பு என வெறும் வாய்ப்பேச்சு பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நடைமுறையில் அப்படியா இருக்கிறீர்கள்'' என பொரிந்து தள்ளி இருக்கிறார்.

அவர்சொல்வது ஓரளவு உண்மையும் கூட. நாம் நாட்டில் அவை வெறும் மேடை பேச்சாக மட்டுமே இருக்கிறது.

நம் நாட்டிலும் மாடு, ஆடு, நாய், பன்றி என ஒன்றையும் விட்டு வைப்பதில்லை தான். சென்னையிலும் , கேரளா போகும் பாதைகளிலும் மாட்டுக்கறி சந்தைகளே உள்ளது. ஒரு முறை சென்னையில் மாடுகளை நம்மவர்கள் செய்த சித்ரவதைகளையும், கடைகளில் இருந்த ரத்த வெள்ளத்தையும், துடிக்க துடிக்க அவற்றை இழுத்து சென்றதையும் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக போட்டுகொண்டிருந்தார்கள்.

நம் ஊரில் ஒன்றும் குறைச்சலில்லை நான் அவர்களை பார்த்து அருவருப்படைய. இருந்தாலும் பசுவாயின்றே , அதுவும் சினை, அதன் குட்டி என படித்து விட்டு இரண்டு நாட்கள் எனக்கு துக்கமே வரவில்லை.

ஒரு கவிதையை நினைத்து தேற்றிக்கொண்டேன்.

''கொல்வது பாவம் எனில்
அணில் என்ன?
எலி என்ன?''

எலிக்கு பொறி வைத்துவிட்டு அணில் மாட்டிக்கொள்ள கூடாது என பிரார்த்தித்தால் அப்போது எலி ஜீவன் இல்லையா?

ஆதிமனிதர்களுக்கும் நவ நாகரீக மனிதர்களாகிய நமக்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இல்லை போல தான் தெரிகிறது உணவு விஷயத்தில்..

2 comments:

Unknown said...

உயிகளின் மீதான பாசம் ஓகே. ஆனால் இதெல்லாம் நமக்கு பழக்கமில்லாததால் வரும் அருவருப்பே அதிகம்.

சிட்டுக்குருவி said...

ப்ரஷ்ஷான குரங்கு மூளையை சாப்பிட்டிருக்கீங்களா மேடம்??? :))

கலாநேசன் சொன்னமாதிரி இதெல்லாம் நாம சாப்பிடரதில்லைங்கிரதனால தான் நமக்கு பச்சையான அசைவ உணவுகள் பிடிப்பதில்லை.