Thursday, August 26, 2010

உலகின் மகிழ்ச்சியான நாடு எது?



கடந்த 2005 முதல் 2009 வரை 155 நாடுகளில் ஒரு சர்வதேச நிறுவனம் எடுத்த சர்வே இது. அந்த பட்டியலில் உலகிலேயே மகிழ்ச்சியான நாடு நெதர்லாந்து தான். டென்மார்க், பின்லாந்து , நார்வே, ஸ்வீடன் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நம்ம அமெரிக்கா முதல் 10 இடங்களில் கூட வரவில்லையாம்.

''பணம் மட்டும் மகிழ்ச்சியை தராது. மற்ற வசதிகள், அமைதியான சூழ்நிலைகள் தான் மகிழ்ச்சியை தரும் '' என இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.

சரி.. இந்த கணக்கெடுப்பில் இந்தியாவின் நிலைமை என்னவாம்?

இந்த கணக்கெடுப்பு பட்டியலில் (155 நாடுகளில்) இந்தியா இடம்பெறவே இல்லையாம் !..

அப்போ இந்தியா மகிழ்ச்சியற்ற நாடு என்று முடிவே கட்டிவிட்டார்களா ?! . அப்படியெனில் நாம் எல்லாம் சகிப்புத்தன்மை கொண்ட 'தியாகிகள்' தானே ! எப்பேர்ப்பட்ட மக்கள் நாம். !

உலகிலேயே சிறந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும், ஞாபக மறதியும் கொண்ட, மக்களை கொண்ட நாடு 'இந்தியாதான்'. ஒந்த சான்றிதழையாவது யாரேனும் கணக்கெடுத்து கொடுத்தால் தேவலை.

இன்னொன்றும் தோன்றுகிறது. இந்தியா மகிழ்ச்சியற்ற நாடு என்றால் நமது தேசப்பற்றிற்கு கோபம் வருகிறதே. நம்மை மட்டம் தட்டியது போல ஆகாதா..?

ஆனால் கண்டிப்பாக நமது நாட்டில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கும் கூட்டம் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை. நமது மாண்புமிகு 'அரசியல்வாதிகள்தானே!'

ஒரு கால்பந்து மைதானத்தில் ஒரு டீம் கால்பந்து ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அணி ப்ளேயர்கள் சோனியா, மன்மோகன் , ஜெயலலிதா, மம்தா, கருணாநிதி, லல்லு, வாஜ்பாய், அத்வானி, இப்படி போகிறது. அவர்கள் அடித்து துவைக்கும் பந்தில் ஒரு மனித முகம் மங்கலாக தெரிகிறது. அந்த முகம் யார்....?

அட , நம்ம இந்திய குடிமகன் தான் !

3 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

உண்மையே!!

Hariharan said...

superb article ,

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//அவர்கள் அடித்து துவைக்கும் பந்தில் ஒரு மனித முகம் மங்கலாக தெரிகிறது. அந்த முகம் யார்....?

அட , நம்ம இந்திய குடிமகன் தான் !//

100/100 உண்மை!