Friday, August 20, 2010

அரசுக்கு சில அவசியமான சட்ட ஆலோசனைகள்

இந்தியாவில் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு யாரும் டான்சே ஆடக்கூடாது என்ற சட்டம்.

நமது தொலைக்காட்சிகளில் எப்போது பார்த்தாலும் டான்ஸ் டான்ஸ் டான்ஸ்....ஜோடிகள் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். நடுவர்கள் மதிப்பெண் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளும் விட்டுவைக்கபடவில்லை. பாரதியார் ஓடி விளையாடு பாப்பா என்றுதான் பாடினார். இப்படி ஆடுவார்கள் என்று அவருக்கு தெரிந்தா இருக்கும்?!. இதில் சீசன் வைத்து வேறு கொலை செய்கிறார்கள். எந்த சேன்னல் போட்டாலும் ஆட்டம்தான். பார்க்க வேறு சேன்னல்களும் இல்லாமல் இதை பார்த்தே ஆகவேண்டியது தலை எழுத்தாக இருக்கிறது.
இப்படியே போயிட்டு இருந்தா என்னைய அர்த்தம்.. இதற்கு ஒரு முடிவே கிடையாத ?.. என மக்கள் கொதிப்படைந்து எழுவதற்குள் அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டுவந்தால் நல்லது.

சினிமாவில் ஹீரோ ஒபெனிங்க சாங்கிற்கு தடை சட்டம் .


கதாநாயகர்கள் தங்களை தாங்களே புகழ்ந்து பாடி போது மக்களை வெகுவாக குழப்பி வருவதாலும், இதற்கு மேலும் புகழ்ந்து எழுத முடியாமல் கவிஞர்கள் படும் வேதனையை கருத்தில் கொண்டும் அரசாங்கம் ஹீரோ ஒபெனிங்க சாங்கிற்கு தடை சட்டம் .
இயற்ற வேண்டும்.

மதுரை, அறிவா, வெட்டு, குத்து என பீதியை கிளம்புபவர்களையும் , பஞ்சு டயலாக் பேசி பாடாய் படுத்துபவர்களையும் 6 மாதம் கடுங்காவலில் உள்ளே தள்ளும் சட்டம்

டிவி சீரியல் பார்க்கும் அம்மணிகள் தங்கள் வடிக்கும் கண்ணீரை மழை நீர் சேகரிப்பு திட்டம் போல 'கண்ணீர் சேகரிப்பு திட்டம்' போட்டு நிலத்தடிக்கு நீர் பாய்ச்சும் சட்டம்.

நிலக்கரியில் இருந்து மின்சாரம் கிடைக்கிறதோ இல்லையோ, அம்மாவுக்கும், ஐயாவுக்கும் தினமும் அறிக்கைகள் கிடைத்து விடுகின்றன. எனவே அறிக்கையில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிந்தால் நம் மின்சார பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கலாம். அதற்க்கான வழிகளை ஆராய விஞ்ஞானிகளுக்கு உத்தரவிடலாம்.

செல்போனில் பேசும் டீநேஜ் பெண்கள் மிகவும் தாழ்ந்த குரலில் பேசிக்கொள்வதால் அருகில் இருப்போர் காதை தீட்டினாலும் ஒன்றும் கேட்பதில்லையாம். அவர்கள் வாய் பேசுவது மூக்கிற்கே கேட்காதவாறு முனகுவதால் 'முனகல் தடைச் சட்டம்' பாய்ச்சலாம்.

ஆடை விளம்பரங்களில் எப்போது பார்த்தாலும் பெண்களே கூடி கும்பி அடிப்பதால் ஆண்கள் பாதுகாப்பு அமைப்புகள் கவலையில் உள்ளனராம். அவர்களை வெத்துவேட்டாக காட்டி விடுகிறார்களாம் . ஆகவே அவர்களுக்கும் ஆடை விளம்பரகளில் சம உரிமை அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தலாம்.

4 comments:

Kolipaiyan said...

'முனகல் தடைச் சட்டம்' - superb!

vels-erode said...

ஹலோ....இது கொஞ்சம் ஓவரு.

அடியாள் வரும் , ஜாக்ரதை.

Unknown said...

unga kobam niyamanathu

என்னது நானு யாரா? said...

உங்க பேரே சூப்பரா இருக்கு! அதுக்கு என்ன அர்த்தமுங்க! பதிவு சூப்பருங்க! நகைசுவை இயல்பா இருக்கு. அதுவும் 'கண்ணீர் சேகரிப்பு திட்டம்', அறிக்கையில் இருந்து மின்சாரம் தயாரிக்கிற திட்டம், சூப்பருங்க!!!

நான் புதுசா கடை திறந்திருக்கேன். கடைக்கு வந்து சரக்கெல்லாம் எப்படி இருக்குன்னு படிச்சு பாத்து சொல்லுங்க! உங்க கருத்துக்கும், ஓட்டுக்கும் காத்திருக்கேன்.