Tuesday, July 13, 2010

செம்மொழியும் சோப்புக் கம்பெனிகளும்



செம்மொழி மாநாட்டில் அரங்கேறிய பல நகைச்சுவைக் கட்சிகளில் சில...


கிளம்பிற்று காண் ஜால்ரா கூட்டம்.

''செம்மொழி தங்கமே!
எங்கள் செல்ல சிங்கமே!
உன்னை கும்பிட்டால்
ஊரையே கும்பிட்ட மாதிரி ''
என ஆரம்பித்து வைத்தார் வைரமுத்து.


"கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களை விட ஈரப்பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால் கோபால புர வீட்டை கொடையாக தர முடியுமா? அந்த ஔவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால் அதியமான் ஏமாந்திருப்பான் '' என்றெல்லாம் கவிதை மழை பொழிந்தது ஈரோடு தமிழன்பன்.

பாடலாசிரியர் விவேகா '' தலைவா, நீ சாக விளக்கு, விதி விலக்கு, அகல் விளக்கு, அகலா விளக்கு. சென்னைக்கு தெற்கே உள்ள திருக்குவளையில் தான் தமிழுக்கு கிழக்கு பிறந்தது'' என கண்டுபிடித்து சொன்னார்.

இதையெல்லாம் பார்த்த வாலி சும்மா விடுவாரா..
''காற்றே கலைஞர் புகழ் பாடி திரி'' என ஆணையிட்டார்.


'' கலைஞரை முத்தமிழ் என்று சொன்னால் நான் முரண்படுவேன். அவர் மொத்த தமிழ். வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை கலைஞர் '' என புகழ் படி பொழிந்தார் பழனி பாரதி.

''82 வயது மறைத்த இளைஞனே,
கலைஞரில் இருக்கிறார் கடவுள்.
108 வடிவில் காப்பது கலைஞர் தானே!''
என தன் பணியை செவ்வனே முடித்தார் பா.விஜய் .


இன்னொரு பாடலாசிரியர் கவிதை
''உலகத்துக்கு ஒரு ஐ.நா.; உலகத் தமிழர்க்கு நீ நைனா''


மற்றொரு பாடலாசிரியர்..
''பெண்கள் என்றால் என் நினைவுக்கு வந்தது பிராந்தி பாட்டில்.
இப்போது நினைவுக்கு வருவது பிரதீபா பாட்டீல்''
(என்ன கொடுமை இது)

கவிஞரே உமது கவிதையின் அர்த்தம் மட்டும் பிரதீபா பாட்டீலுக்கு புரிந்திருந்தால் உம்மை பாட்டிலாலேயே ஒரு போடு போட்டிருப்பார். இதை எல்லாம் கேட்பது நமது தலையெழுத்து.


எல்லாவற்றிற்கும் மேலாக வைரமுத்து சொல்லியிருப்பது தான் மனதை மிகவும் தைக்ககூடியது.

''கலைஞர் காப்பீட்டு
திட்டத்தில்
உழவன் சேர்ந்தான்,
உழைப்பாளி சேர்ந்தான்.
அன்னதாய் சேர்ந்தாள்,
பொன்னுத்தாய் சேர்ந்தாள்.
சேராத ஒரே தாய் தமிழ் தாய் '' என.

தமிழை நலிவடைந்தோர் பட்டியலில் சேர்த்து கலைஞரை சரண்புக சொல்கிறார்.
தமிழ் தாயே உன் தரம் இவ்வளவு தாழ்ந்து விட்டதா. என்ன கொடுமையான வரிகள். இவருடைய கவிதைகளை நானும் ரசித்தேன் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்.

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ் தலைப்புகள் வைத்தால் வரிச் சலுகை என்றும், தமிழ்நாட்டு கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை அறிவிப்பால் தமிழ் வளரும் என்றும் நினைப்பது கேலிக்கூத்து. இத்தனை கண்காணிக்க காவல்துறை தடி எடுத்துக்கொண்டு (தொலைக்காட்சி கேமராக்கள் பின் தொடர) கிளம்புவது அதைவிட பெரிய கேலிக்கூத்து. கவிஞர்களே உங்கள் கவிதைகளை ரசிக்கிறோம். கொண்டாடுகிறோம். இந்த மாதிரி கன்றாவிகளை அல்ல. கலைஞரால் எப்படி இவற்றை காது கொடுத்து கேட்கமுடிகிறது என்று தெரியவில்லை.




6 comments:

பகலவன் said...

அருமை ........

தினேஷ் ராம் said...

ஆ..ஆ.. x-(

கலைஞரை புகழுவது அடிவருடிகளின் தர்மம் ஆகி விட்டது. பரவாயில்லை.. அது பிழைப்பிற்காக என மன்னிக்கலாம். கை மேல் பலன் தரும் தர்மம் அன்றோ!!

ஆனால் வைரமுத்துவின் கவிதையில் உள்ள உவமை.. அவரின் நன்றியுணர்ச்சியை மிகையாகி மட்டமாகி விட்டது. அவரது தர்மம் தமிழை எள்ளலுக்கு உட்படுத்தும் அளவு அவரை தள்ளியிருப்பது மகா கேவலம்.

ஒன்னும் சொல்வதற்கில்லை!!

கோவி.கண்ணன் said...

//"கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களை விட ஈரப்பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால் கோபால புர வீட்டை கொடையாக தர முடியுமா?//

கவுஜ எழுதும் முன் அவர்கள் வெண்ணீராடை மூர்த்தியிடம் காப்புரிமை பெறவில்லையா ?

Hariharan said...

என்ன கொடுமை சார் , இது

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கபாலம்( நன்றி:வெ.ஆ.மூர்த்தி) இராமர் பாலம் அல்ல கோடிகோடியா ஊராமுட்டு சொத்தை சுருட்டி அடைப்பதற்கு!

Anonymous said...

கிளிநொச்சி வீழ்ந்தபோது..

கிளி வீழலாம்.. ஆனால் புலி வீழாது என்று வசனம் பேசிய வைரமுத்து.. அடுத்த 3 மாதங்களில் 80 ஆயிரம் போ் உயிரிழந்த கொடூரம் நடந்த போது கலைஞரின் வேட்டிக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.

இவருடைய கவிதைகளை நானும் ரசித்தேன் என்பதை நினைத்து நானும் வெட்கப்படுகிறேன்