Monday, July 26, 2010

மனம் மயக்கும் ராகம்


''சொர்க்கம் மதுவிலே.. '' கமல் படப்பாடல். எனக்கு அந்த வீடியோ கிடைக்கவில்லை.
http://www.youtube.com/watch?v=SWw2yhqa7VI&feature=related
என்ன அருமையான பாடல் இது. மனதை மயக்கும் ராகம். மனதை மயக்கும் இசை. கர்நாடிக் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன். இது என்ன ராகம் என்று. பாடல் ஆரம்பித்து முடியும் வரை மனம் எண்ண ஓட்டத்தை நிறுத்தி ராகத்திற்கு மயங்கி மகுடி ஆடத் தொடங்கி விடுகிறது. மனதை ஒரு நிலைப்படுத்தினால் ஏற்படும் மயக்க நிலை. ராகம் என்னவென்று தெரிந்தால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இறைவனுக்கும் இசைக்குமான தொடர்பு தன் என்ன அற்புதமானது. அதனால் தான் நம் முன்னோர்கள் இசையின் மூலமே இறைவனை ஆராத்தித்துள்ளனர். இறைவனுக்கும் இசைக்குமான தொடர்பை, இசைக்கு நம் மனம் மயங்கி விடும் போது உணர முடிகிறது. சில ராகங்கள் நம் ஆன்மாவை தட்டி எழுப்புகிறது. அல்லது நம் ஆன்மா அதனோடு ஒன்றி விடுகிறது. ஆதி நிலையை சில கணநேரங்கள் உணர்த்துகிறது. கண்களில் நம்மை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கும். எல்லோருக்கும் எல்லா ரகங்களும் பிடிப்பது இல்லை.
சிலருக்கு பிடிப்பது சிலரை கவர்வது இல்லை. நம் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது நாம் கேட்ட ராகமே நமக்கு எப்போதும் பிடித்ததாக இருக்கும்.அது எப்போதும் அழியாத ஒன்று. முன்பு ஒருமுறை கல்கியில் படித்த நிஜ சம்பவம் இது.

ஒரு கர்பிணிப்பெண் எப்போதும் கர்நாடிக் இசை கேட்டுகொண்டே இருக்கிறாள். தனக்கு பிறக்கும் குழந்தை இசைக்குழந்தையாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் ஆசை. எப்போதும் வீட்டில் இசைமழை தான். அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. சிலமாதங்கள் கடந்து ஒரு நாள் அவர்கள் வீட்டில் எல்லோரும் தொலைக்கட்சியில் ஒரு கர்நாடிக் படலை பார்த்துகொண்டிருந்தார்கள். அந்த குழந்தையின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர். அந்த குழந்தை ஆனந்தமாக தன்னை மறந்து அந்த ராகத்தோடு லயித்து விட்டிருந்தது.

மெய்மறந்து இசையை கேட்பது ஒரு தவம். கோயில் மணிகளின் ஓசையை கேட்டுப்பாருங்கள். 'டண் டண்' என்ற ஒலி நம்மை ஏதோ செய்யும். நமக்கு எதையோ உணர்த்த முயல்வது போல இருக்கும். நம் மனம் அந்த ஒலியையே சுற்றி சுற்றி வரும். கூர்ந்து நோக்கினால் அந்த ஒலி பிரபஞ்சத்தின் சாரமாகவே இருக்கும்.
இசைக்கு மயங்காத மனிதர்கள் யாரும் இல்லை. இந்த பரபரப்பான நரக வாழ்கையில் இருந்து இசை மட்டுமே நம்மை அடையாளப்படுதுகிறது. மனம் தன் தொடர் ஓட்டத்தை நிறுத்தி தன்னை அடையாளம் காண முயற்சிக்கிறது சில கணநேரங்களுக்கு.இந்த பாடலின் வரிகளும் காட்சிகளும் எப்படியோ இருந்தாலும் ராகம் அற்புதமானது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

4 comments:

Kolipaiyan said...

Nice

நாடோடி said...

http://www.youtube.com/watch?v=SWw2yhqa7VI&feature=related

இந்த‌ பாட்டையா சொல்லுகிறீர்க‌ள்?...

Unknown said...

yes... antha padal than

எம்.எம்.அப்துல்லா said...

இது நான் அவதானித்த வகையில் இந்தப் பாடல் ”நடைபைரவி” ராகத்தில் வருகின்றது. இதன் ஆரம்பம் சரியான நடைபைரவியில் வருகின்றது. பின்னர் அவரோகணத்தில் ( இறங்கும்போது ) பெரிய ”நி” வந்தால் அது சரியான நடைபைரவி. ஆனால் சின்ன ’நி’ வருகின்றது. அதனால் இதை சுத்த நடைபைரவி என்று சொல்ல முடியாது. இருப்பினும் இந்தப்பாடல் மொத்தமாக நடைபைரவிக்குள்தான் அடங்குகின்றது.

பரிட்சாத்தமாக இதைச் செய்து சரியாய் முடிக்க ஒரு இசை அமைப்பாளருக்கு மகா தில் வேண்டும். ராசா ராசாதான் :)

அப்புறம் இன்னோரு விஷயம், நான் வெறும் கேள்வி ஞான பார்ட்டி.முறைப்படி எவரிடமும் கற்றவன் அல்ல. நன்கு அறிந்தவர்கள் மேல் விளக்கம் தந்தால் மகிழ்வேன்.