இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.
பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.
உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?
தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.
இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.
திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:
1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.
2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.
3.கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும்
பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.
4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.
5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்
இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.
இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.
இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.

18 comments:
மிகசரியான உண்மை !!பதிவிட்டதற்கு நன்றி !!
அனைவரும் அறிய வேண்டிய மிகவும் விழிப்புணர்வுமிக்க பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிங்க மேடம்.
அங்கென்றல்ல! உலகம் பூராகவும் இந்த ஏமாற்று நடந்து கொண்டே இருக்கிறது. ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருப்பர்.
பேராசை, உழைக்காமல் அதிக பணத்தேடலில் நாட்டமுள்ளோரே நிச்சயம் இவர்களிடம் சிக்குபவர்கள்.
இவர்கள் மனம் மாறினால் தான் அவர்கள் மாறுவார்கள்.
இது கூட்டுக் கொள்ளை, இந்த தொ.கா -நிறுவனங்கள்- அரசியல் தொடர்புள்ளவர்களது; அரசபணத்தையே அமுக்குவோர், அடுத்தவன் பணத்தை விட்டுவைப்பார்களா?
நாம் திருந்த வேண்டும்....திருந்துவோமா????
பதிவிட்டதற்கு நன்றி
இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தடைவிதிக்கப்பட்டால் தவிர, இந்த கொள்ளையை தடுக்க வேறு எதுவும் வழியில்லை என நினைக்கிறேன். நன்கு படித்தவர்களே ஆர்வக் கோளாரில் போன் செய்து பணத்தை பறிகொடுக்கிறார்கள். இன்னும் படிக்காத பாமர மக்களை சொல்லவா வேண்டும்...!? கொடுமையோ கொடுமை..! கொள்ளையோ கொள்ளை..!!
மனிதனுடைய ஆசை எனும் பைத்தியத்தை வைத்து கொள்ளையடிக்கிறார்கள்...
உங்கள மாதிரியே நானும் பாதிக்கப்பட்டு இருக்கின்றேன்.என்னோட பதிவு
கொஞ்சம் பாருங்களேன்.
http://kovaineram.blogspot.com/2011/03/blog-post_2978.html
நல்ல பதிவு தோழி...
மக்களுக்கு தேவையான ஒரு முயற்சி இது...
இன்றைய வலைச்சரத்தில் தங்களது வலைதளத்தைப் பகிர்ந்துள்ளேன்.
நேரமிருந்தால் வருகை தரவும்.
http://blogintamil.blogspot.com/2011/08/5.html
அது உண்மை
பேராசை பெருநஷ்டம். முன்னோர்கள் சரியாகதான் சொல்லி உள்ளனர்.நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆனாலும் யார் கேட்கிறார்.ஒவ்வொருவரும் தூங்கி எழும் போதும் பேரும் பணக்காரர்களாக எழ வேண்டும் என்று தான்
விருப்புகிறார்கள்.அதன் விளைவுகள் இவை...
அனைவருக்கும் நன்றிகள்...
இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை. //
விழிப்புணர்வு தரும் பகிர்வுக்குப் பாராட்டுகள்.
நல்ல பதிவுங்க
இந்திரா அவுங்க வலைப்பதிவின் மூலமாக வந்தேன்
நல்ல எழுதறீங்க
வாழ்த்துக்கள்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் தோழி
இது போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் விரும்புவதில்லை என்பதே உண்மை.. இதைக்கூட புரிந்துக்கோள்ளாமல் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளாக தொடர்வது தான் கொடுமை.... பகிர்வுக்கு பாராட்டுக்கள்
still they continue to cheat..
பிணத்துக்கு அறுவை சிகிச்சை.
மிகவும் சரியா சொல்லியிருக்கீங்க!!
மூலைசலவையின் உச்சநிலை இது!!
விளக்கில் வீழும் விட்டில் பூச்சிகளாக அப்பாவி மக்கள்!!
சிறந்த விழிப்புணர்வு பதிவு!
இதே போன்று தான் நடன / பாட்டுப் போட்டிகளில் கூட, சிறந்த நாயகர்களுக்காக் பரிந்துரைக்க வேண்டி குறுஞ்செய்தி மூலம் ஜனநாயக முறையினில் வாக்களிக்க கூறுவர். ஒருவரே எத்தனை வாக்குகள் வேண்டுமானாலும் அளிக்கலாம். இன்று ’குறுஞ்செய்தி’ என்பது கிட்டதட்ட இலவசமாக உள்ள நிலையில் இவர்கள் அளிக்கும் எண்ணிற்க்கு 3 ரூபாய் செலுத்த வேண்டி வரும். இதுவும் ஒரு வித கொள்ளையே!
Post a Comment