--இப்படிக்கு மழை.
''அப்பாடா..தண்ணி கஷ்டம் தீந்தது..''
பெண்ணொருத்தி..!
''பட்டாசு வியாபாரம் பாழாப்போச்சு''
வியாபாரியொருவன்..!
''ஒரே சேறு,சகதி..வீதில கால் வைக்க முடில..''
நடைபயணியொருவன்..!
''ஒரே தண்ணியா,கசகசன்னு..கருமம் புடிச்சது''
இருசக்கர வாகனன்..!
''இப்பவாவது பேஞ்சு என் வயித்துல பால வாத்த.''.
விவசாயியொருவன்!
''பட்டாசு வெடிக்க முடியல''
''இந்த பாழாப்போன மழையால..''
வேறு சிலர்...!
''வெயில் சூடு தணிஞ்சு நல்லாருக்கு..''
அதிலும் சிலர்..!
'பேய் மழை..பிசாசு மழை' என்றான்
செய்தி வாசிப்பவன்..!
போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே..!
--இப்படிக்கு மழை.
5 comments:
மழை ரசிப்பவர்களுக்கு தேவதை, வியாபாரிகளுக்கு ராட்சசி, சிறுவர்களுக்கோ லீவுக்குக் காரணியாகும் கடவுள்... இப்படி மழையின் பல வடிவங்களை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மிகவும் ரசித்தேன். நன்றியும், வாழ்த்துக்களும்!
யோஹன் - அப்படின்னு ஒரு விஜய் படம் வருது.. அதப் பத்தின்னு நினைச்சி உள்ள வந்துட்டேன்...
யோஹன்னா யாழினி
யோஹன் MEANING யாழினி - அப்படின்னு பட்டது !!!
NICE !!
என்னோட பெற பார்த்துதான் கௌதம் அந்த படத்துக்கு 'யோஹன்' ன்னு பேரு வச்சுருக்காருகோ ..
மழை பற்றி அருமயான பதிவு,...
தில்லு துர எங்க போனாரு??/
Timing கவிதை
Post a Comment