Saturday, May 7, 2011

கனவுலகில் ஒரு பயணம்..




தினமும் காலையில் உணவோடு பேருந்தில் சிக்கித் திணறி, அலுவலகம் சென்று செயற்கையான மனிதத்தோடு, விருப்பமில்லாத வேலையை தொடர்ந்து, மீண்டும் இரவில் ஒரு பயணம், வீடு, உணவு, உறக்கம், வேலை... இந்த பைத்தியக்கார வாழ்க்கைமுறையை கண்டு வாழ்கை என்பது இவ்வளவு குறுகிய வட்டமா என்று நாளுக்கு நாள் எரிச்சலோடு முடிகிறது. ஞாயிறுகளை தூங்கிக்கழித்தும், திருவிழாக்களில் சிறிது மகிழ்ந்தாலும் மனதில் உள்ள வெறுமை வேதனையானது.

இவற்றை தவிர நம் வாழ்கை முறையில் மாற்றம் இல்லை. முடிந்தால் கொடைகானலுக்கும், ஊட்டிக்கும் சுற்றுலா செல்வோம்.


கண்களை மூடி மனதை விரித்துப்பாருங்கள். 65000 மைல் சுற்றளவுள்ள மிகப்பெரிய நில உலகம். பூமியை போல பத்து லட்சம் மடங்கு பெரிய சூரியன். அதையும் தாண்டி போனால், சூரியன் போல பல லட்சம் மடங்கு பெரிய பெரிய சூரியன்கள் லட்சக்கணக்காக.. அவையெல்லாம் ஒன்று சேர்ந்த நட்சத்திர மண்டலங்கள். அவை பலகோடிகள் சேர்ந்த தொகுதிகள், கொத்தியக்கங்கள்..... இன்னும் நீண்டு கொண்டே இருக்கின்றன இந்த மிகப்பெரிய பிரபஞ்சத்தில்.

என்னால் இந்தளவுக்கு போகமுடியாவிட்டாலும் சூரியனை பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வழியில் என் பயணத்தை தொடர்ந்து செல்ல ஆசை.

சமீப நாட்களாக ஒரு எண்ணம். இந்த எந்திர வாழ்கையை விட்டு விட்டு எங்காவது ஓடிப்போய்விட வேண்டும். எங்காவது என்றால் 'into the wild' என்றொரு படம். அதன் நாயகன் போல. வீட்டை விட்டு காட்டை நோக்கி பயணப்பட்டு விட ஆசை. அந்த பயணத்தில் என்னோடு, என் எண்ணங்களோடு, என் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கும் நண்பர்களோடு பயணப்பட ஆசை. கையில் ஒரு பைசா இல்லாமல், அலைபேசி, நகை நட்டு, என எல்லாவற்றையும் துறந்துவிட்டு காட்டு விலங்குகள் போல், மனித விலங்காக ஒரு அடர்ந்த கானகத்தில் ஒரு நாள் வாழ்க்கையாவது வாழ ஆசை.

இப்படி நான் தினமும் நிகழாத ஒன்றை கற்பனையிலாவது சென்று பார்க்க ஆசைபடுவேன். இது தொடர்ந்ததாலோ என்னமோ ஒரு நாள் கனவாகவே மலர்ந்தது. எழுந்ததும் கலைந்துவிடும் கனவுக்கு மத்தியில் இந்த கனவு கலையவில்லை. இன்னமும் என் நினைவில் ஊஞ்சலாடுகிறது.

கனவில் நான் ஒரு அடர்ந்த கானகத்தில் அங்கிருக்கும் மரங்களை கொண்டு ஒரு குடிசை போட்டு ஓரிடத்தில் தங்கியிருக்கிறேன். எங்கும் சர்வ அமைதி. வண்டுகளின் ரீங்காரமும், சில காட்டு விலங்குகளின் ஓசையை தவிர. காட்டுச் செடிகளிக்கு நடுவே நான் நடந்து செல்கிறேன். அதன் இலைகளில் இருக்கும் பனித்துளிகளை முகத்தில் அடித்துக்கொண்டு நடந்து கொண்டே இருக்கிறேன். என் மனதில் பயம் இல்லை. காட்டுவிலங்குகள் பற்றிய பயம் இல்லை. இருட்டை கண்டு அச்சம் இல்லை. அங்கிருக்கும் அருவிகளில் குளித்து ஆனந்தக் கூத்தாடுகிறேன். அந்த கானகத்தில் எத்தனையோ வண்ணங்களில் வித விதமான பறவைகள் கண்டு வியக்கிறேன். மான்களும், குரங்குகளும், பெயர் தெரியாத விலங்கினங்களும் என்னை சுற்றி விநோதமாக என்னை பார்க்கின்றன. ஆனால் அவற்றின் கண்களில் குரூரம் இல்லை. அவை நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் என் பின்னாலேயே வருகின்றன. நான் ஒரு குட்டி புள்ளி மானை கையில் தூக்கிக் கொண்டு என் குடிசைக்கு வருகிறேன். பசிக்கும் போது அங்கிருக்கும் கோரை புற்களை, ஏதேதோ கிழங்குகளை பிரியமாக சாப்பிடுகிறேன்.



அப்போது என் குடிசையை சுற்றி நான்கைந்து காட்டு யானைகள். ஆனால் எனக்கு ஆச்சர்யம்..!! நான் கொஞ்சமும் பயப்படாமல் ஒரு யானையின் அருகில் சென்று அதன் தும்பி்க்கையில் ஒரு கிழங்கை கொடுத்து தடவி விடுகிறேன். அதன் காது மடல்கள் எனக்கு எட்டவில்லை. குதித்து குதித்து தொட முயற்சிக்கிறேன். சிங்கமும், புலியும் என் அன்பிற்கு கட்டுப்படுகின்றன.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்..

எல்லாவிலங்குகளும் அன்பிற்கு கட்டுப்படுகின்றன. என் குடிசையை சுற்றி சர்வலோகம். என் மனம் அளவில்லாத மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது. வாழ்கையின் நிறைவை, மகிழ்ச்சியை அடைந்துவிட்டதாக ஒரு ஆனந்தம்.

15 comments:

Praveenkumar said...

கட்டுரை மிகவும் அருமையான கற்பனைத்திறனுடன் எழுதியிருக்கீங்க.. கனவு மெய்ப்பட வாழ்த்துகள்..!!

Praveenkumar said...

//எல்லாவிலங்குகளும் அன்பிற்கு கட்டுப்படுகின்றன.// உண்மைதான் ஆனால் இதில் மனித விலங்குகள் மட்டுமே... சுயநலத்திற்காக.. தன் இனத்தையே அழித்துக்கொள்கின்றன.

பா.சண்முகம் said...

நான் அடுத்து எழுதலாம்னு இருக்குற சப்ஜெக்ட் எடுத்து இருக்கீங்க கனவு தானே இன்னும் கூட போய் சொல்லி இருக்கலாம், நன்று இனி சொல்லவருவதை சீக்கிரம் சொல்லி விட வேண்டும் நிறை பேர் முந்தி கொள்கிறார்கள் .நன்று

Unknown said...

hahaha..ithu naanum neenda naalaaga manathil vaithirunthathu

manimaran said...

Nice Yalini... eppidi oru life kadaichalum nalla taan eirukkum.. aana, cellphone,tv, current ellathium marandhu oru life eirukka mudiyuma'nu oru doubt'um eirukku..!!!

பனித்துளி சங்கர் said...

பதிவை வாசித்து முடித்த பொழுது மீண்டும் ஒரு முறை சுவாசிக்கவேண்டும் என்ற பெருமூச்சு .

தேகம் எங்கும் சிலிர்த்துகொல்கிறது ஒரு சந்தோசம் . அருமையான எதார்த்த எழுத்து நடை . அவசர உலகத்தில் கண்மூடி பயணிக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய பதிவு

Unknown said...

nandri..shangar..!

Prabu Krishna said...

கனவு நனவாக வாழ்த்துகள்!!!![ஏதோ என்னால முடிஞ்சது]

நிரூபன் said...

உரை நடைத் தமிழில் இயந்திரமயமான உலகை விட்டு, தன் எண்ணங்களோடு கூடுடைத்துப் பறக்க ஆசைப்படும் ஓர் ஜீவனின் உணர்வுகளை இங்கே அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

உரை நடைத் தமிழும், பதிவை நகர்த்தும் விதமும் அருமை.

Romeoboy said...

நல்ல இருக்கு பதிவு :)

Unknown said...

நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பலகோடி..!

Yaathoramani.blogspot.com said...

இயந்திர வாழ்க்கையிலிருந்து படிப்பவர்களையும்
அடர்ந்த அன்புகொண்ட மிருகங்கள் நிறைந்த
காட்டுக்குள் அழைத்துச் செல்வதைப்போன்ற
அருமையான எழுத்து நடை
மீண்டும் மீண்டும் ரசித்துப் படித்தேன்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

தங்களின் கருத்துரை மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி தோழர்..

Unknown said...

nandri

ஜெயபாலன் said...

எல்லாவிலங்குகளும் அன்பிற்கு கட்டுப்படுகின்றன. உண்மைதான்.
சமூக அக்கறையின் எள்ளல் மலிந்த உங்கள் விமர்சனகளை விரும்பி வாசிக்கிறவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் உங்கள் கனவுகளும் கற்பனைகளும் அதைவிட பரந்தது என்பதற்க்கு இக் கட்டுரை சாட்ச்சியாயிருக்கு.