‘நான் ஒரு அறிக்கைவிட்டால் தமிழகமே பற்றி எரியும்’ என, சினிமா டயலாக் சொல்வது போல் பேட்டியளித்துள்ளார் தங்கபாலு.தேர்தல் பிரசாரத்தில் வடிவேலுவின் காமெடி பேச்சை கேட்ட தமிழக மக்கள் தற்போது தேர்தல் முடிந்தபின் இவருடைய காமெடியை ரசிக்கின்றனர்.
கொல்லைப்புறமாக வந்து எம்.எல்.ஏ.சீட்டை பெற்ற தங்கபாலு , இவ்வளவு வீராவேசமாக பேசுவது வேடிக்கையாக உள்ளது.இவ்வளவு செல்வாக்குள்ள இந்த நாயன்மார்கள் ,அறிவாலயத்தை ஏன் வலம்வந்தனர்?அந்தளவு செல்வாக்குள்ளோர் என்ன செய்திருக்க வேண்டும்?
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் சீமான் போன்றோரது தமிழ் அமைப்புகள் ,இவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்த போது இவர் அறிக்கை விட்டிருந்தால் , தமிழகம் எரிந்ததா இல்லையா என தெரிந்திருக்கும்.
மீனவர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படும் போதெல்லாம் அமைதியாக அறிவாலயத்தை வலம் வந்தவர் இப்போது திடீர் ஞானோதயமாக மீனவர்கள் பிரச்சனைக்காக இலங்கை தூதரகத்தை இவர் முற்றுகையிடுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை.பதவியை காப்பாற்ற அவர் போடும் நாடகம் என்பதை அரசியல் அறியாதவர்களும் அறிவர்.
கருணாநிதியுடன் சேர்ந்த தோஷத்தால்,போராட்டம் நடத்துவது,ராஜினாமா நாடகம் அரேங்கேற்றுவது போல்,இவரும் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட அதே நேரத்தில் வாசன்,இப்பிரச்சனை குறித்து டில்லியில் சோனியாவை சந்தித்ததே இதற்கு காரணம் .
மீனவர்கள் ஏற்கனவே ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் தன் சுயநலத்திற்காகவும்,பதவி சுகத்துக்காகவும் மீனவர்கள் நலனில் அக்கறை உள்ளதுபோல் இவர் நீலிக்கண்ணீர் வடிப்பதை மீனவர்கள் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள்.
மத்தியில் இவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தான் ஆள்கிறது.அவர்கள் நினைத்தால் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கலாம் என்றிருக்கும் போது இவர் டில்லி சென்று சோனியா இல்லத்தை முற்றுகையிட்டிருக்க வேண்டுமே ஒழிய, இலங்கை தூதரகத்தை அல்ல.
5 comments:
//இவர் டில்லி சென்று சோனியா இல்லத்தை முற்றுகையிட்டிருக்க வேண்டுமே ஒழிய, இலங்கை தூதரகத்தை அல்ல.// ஹி..ஹி..ஹி.. சோனியா இல்லத்திற்கு போவ பாவம் வழிய தெரியாது போல..!!
சிந்திக்க வைக்கும் கேள்விக் கணைகளுடன் பதிவு அருமை..!!
பதவிக்காக எதையும் செய்யும் நாய்கள்!
அவர் பற்றி எரியும்ன்னு சொன்னது அவரது கொடும்பாவி...
hahaha...
Post a Comment