Sunday, December 12, 2010

பாரதியும் ரஜினியும் ஒன்றா !

பாரதியும் ரஜினியும் ஒன்றா !

நேற்று பாரதியாரின் பிறந்த நாள். தமிழ் கூறும் நல்லுலகில் எத்தனை பேருக்கு தெரியும்?.

இன்று ரஜினிகாந்த் பிறந்த நாள். அதற்கு டிவி , பத்திரிக்கையில் பண்ணுகின்ற அக்கிரமங்கள் தாங்க முடியலை.காலையில் இருந்து டிவி யில் ரஜினி ரஜினி தான். ஆனால் அதற்கு முன்தினம் பாரதியின் பிறந்த தினத்திற்கு ஒரு செய்தியையும் காணவில்லை. அப்படி ஒருவர் இருந்தாரா என கூட கேட்டுவிடுவார்கள் போல .

நடிகர்களிடம் அப்படி என்ன தான் இருக்கிறது என மீடியாக்கள் அவர்கள் பின்னாலேயே ஓடுகிறார்கள் என தெரியவில்லை. எல்லாருக்கும் இருக்கும் ரத்தமும் சதையும் தான் அவர்களுக்கும் உள்ளது. அவங்களும் சாப்பாடு தான் சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கும் உடல்நலமில்லாமல் போகும். மரணம் வரும். என்னத்தை தான் காண்கிறார்கள் அந்த 'சுதந்திர தியாகிகளிடம் '?

நடிகர், நடிகைகளுக்கு இந்த மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுக்கும் வரை இந்த நாடு உருப்படாது.

சன் டிவி செய்தி ஒன்று.. தமிழகத்தில் மழை வந்து வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. அவர்களுக்கோ நடிகை பாக்கியலட்சுமி 'காதல் செய்' படத்தின் வில்லன் என்னை கலியாணம் செய் என மிரட்டுகிறார் என்ற புகாரையே திரும்ப திரும்ப முக்கிய செய்தியாக காட்டிகொண்டிருந்தார்கள். நடிகை சரண்யா காணாமல் போய் விட்டார் . இது ஒரு நாள்.

விஜய் டிவி எல்லாதிற்கும் மேல். மன்மத அம்பு இசை வெளியீட்டிற்காக கமலை வரவேற்கிறார்கள். வரவேற்கிறார்கள்... அப்பாப்பா...ஒரே எரிச்சலாக இருந்தது

கன்னியாகுமரியில் வெள்ளத்தை பற்றி சிறப்பு செய்திகளோ, நிகழ்ச்சிகளோ ஒன்றும் இல்லை.

நண்பர் சொன்னார்.. '' எல்லாம் வியாபார நோக்கத்தோடு தான். நாளை ரஜினி இறந்துவிட்டால் அவரையும் மறந்து விடுவார்கள். பாரதியார் வியாபாரம் ஆகமாட்டார். ரஜினி இன்னும் கொஞ்ச நாளைக்கு' என்றார்.

ஆனால் உணர்வு என்பது யாருக்குமே இல்லையா? எல்லாமே இங்கு பணம் தான் !

8 comments:

LOSHAN said...

நல்ல கேள்வி.கேட்கவேண்டிய கேள்வி. சொல்லவேண்டிய விஷயங்கள்..
எல்லாம் வியாபாரம் இங்கே.

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

சென்னை பித்தன் said...

//பாரதியார் வியாபாரம் ஆகமாட்டார். ரஜினி இன்னும் கொஞ்ச நாளைக்கு' //
இங்கு எல்லாமே பணம்தான்; வியாபாரம்தான். பாரதி’யார்” என்று கேட்கும் நிலைதான்.
“நெஞ்சு பொறுக்குதில்லையே”

raja said...

என்ன சொன்னீங்க உணர்வா..? அது எந்த தியேட்டர்ல ஒடுற சினிமா....உலகத்தில் முதுகெலும்பு இல்லாத ஒரு இனம் உண்டென்றால் அது தமிழினமே.. சினிமாக்காரனின் உள்ளாடைகள் கிடைத்தால் அதைகூட கோவில் கட்டி கும்பிடும் இனம் இது. பண்டைய காலத்தில் உச்சத்தில் இருந்த ஒரு இனம் இப்படி பன்னாடைகளாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

philosophy prabhakaran said...

ஊடகங்களுக்கு எப்போதுமே உணர்வுகள் இல்லை... ஒரு படுகொலை கூட அவர்களைப் பொறுத்தவரையில் சூடான செய்தி மட்டுமே...

kiruba said...

Unmai thaan nethu ethu paathalaum Super star thaan ..aana athuku manal barathi piranthanaal TV ......?

But rainbow 102.4Fz 7am la kalaile barathi pathi keden...

sundar said...

Last year Dec11th I heared Many Barathiyar songs in Malaysia Minnal FM. But hear All the FM celebrate Advance Rajini's Birthday. Totally Tamilnadu tamilans only tamil culture & Tamil.

hari said...

emotional article and correct one