Tuesday, December 6, 2011

நானும் சமூக சேவகன் தான்

நான் புகை பிடிக்கிறேன்
ஆயிரக்கணக்கான
புகைப்பிடித் தொழிலாளர்களின்
வாழ்கை
புகைந்து விடக் கூடாது
என்பதற்காக..!

என் நுரையீரல்
கெட்டுப்போனது..
அதனால் என்ன?
எத்தனையோ மருத்துவர்கள்
என்னால் பிழைக்கிறார்கள்..

ஒரு நாள் நானும்
செத்துப்போனேன்
அதனால் என்ன?
நானும் சமூக சேவகன் தான்.