Sunday, October 30, 2011

--இப்படிக்கு மழை.


''அப்பாடா..தண்ணி கஷ்டம் தீந்தது..''
பெண்ணொருத்தி..!

''பட்டாசு வியாபாரம் பாழாப்போச்சு''
வியாபாரியொருவன்..!

''ஒரே சேறு,சகதி..வீதில கால் வைக்க முடில..''
நடைபயணியொருவன்..!

''ஒரே தண்ணியா,கசகசன்னு..கருமம் புடிச்சது''
இருசக்கர வாகனன்..!

''இப்பவாவது பேஞ்சு என் வயித்துல பால வாத்த.''.
விவசாயியொருவன்!

''பட்டாசு வெடிக்க முடியல''
''இந்த பாழாப்போன மழையால..''
வேறு சிலர்...!

''வெயில் சூடு தணிஞ்சு நல்லாருக்கு..''
அதிலும் சிலர்..!

'பேய் மழை..பிசாசு மழை' என்றான்
செய்தி வாசிப்பவன்..!

போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே..!

--இப்படிக்கு மழை.