நேற்று தொலைக்காட்சியில் ஒரு செய்தி..
ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க 3 பேர் அடங்கியகுழுவைவை அமைத்துள்ளனர். இதற்கு இலங்கையில் எதிர்ப்பு. இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் எதிர்ப்பது புத்த மத துறவிகள்.
என்ன கொடுமை பாருங்கள். இலங்கையில் நடைபெற்ற போரில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது குற்றச் சாட்டு. அது குறித்து விசாரிக்க வேண்டும் என்பது இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கை.
ஏதேனும் ஒரு வகையில் நீதி கிடைக்காத என நம் மக்கள் கண்ணீர் விட்டுகொண்டிருக்க இந்த புத்த துறவிகள் ஐ.நா.வின் விசாரணைக்குழுவை எதிர்க்கின்றனர். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா. தலையிடக் கூடாதாம். ஐ.நா. தீவிர வாதத்துக்கு துணை போகிறதாம். பான்.கீ .மூனுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். ஒரு துறவி மைக்கை பிடித்து கத்திக்கொண்டிருந்தார். இலங்கை என்ன அஹிம்சாவாதமா பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் .
ஆமாம். இவர்கள் எல்லாம் புத்த துறவிகள் தானா. புத்தரின் கொள்கைகள் தான் என்ன என்று தெரியுமா. புத்தருக்கு 'ஸ்பெல்லிங்' தான் தெரியுமா. புத்தரின் பேரை உச்சரிக்க கூட இவர்களுக்கு அருகதை இல்லை.
பிற உயிரை கொள்ளவோ அவமதிக்கவோ கூடாது என்பதே புத்தரின் கொள்கை. ரத்த பூமியில் உள்ள புத்தர் கூட ரத்த வெறி கொண்டவராகதான் இருப்பாரோ.
லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கையில் போர் என்ற போர்வையில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களின் இழிசெயலை விசாரிக்க கூடாது என்றால், அத்தனை மக்களையும் கொன்றோளித்ததை நியாயம் என்கின்றனரா. புத்த துறவிகள் என்று சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லை.
நீதி கிடைக்கிறதோ இல்லையோ, இந்த கொடூர அக்கிரமத்தை விசாரிக்க கூடாது என்று சொல்லும் புத்த துறவிகளை பெற்ற புத்தர் தான் வெட்கி தலை குனிய வேண்டும்.